நெருங்கும் தைப்பொங்கல்: மஞ்சள் குலை அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், நெல்லையில் மஞ்சள் குலை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

Update: 2022-01-10 08:15 GMT

மஞ்சள் அறுவடையில் தீவிரமாக உள்ள விவசாயி ஒருவர். 

நெல்லை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலை விளைச்சல் அமோகமாக உள்ல நிலையில், அதை அறுவடை செய்வதில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர். 

இதுகுறித்து நெல்லை டவுண் பாறையடி ஊரை சேர்ந்த ஊய்க்காட்டன் பகுதி விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைக்கு மஞ்சள் குலையினை அதிக அளவில் பயிரிட்டோம். இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாகவே மழை பெய்த காரணத்தால், மஞ்சள் விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும் வரும் வெள்ளி கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் மஞ்சள் குலையினை விற்பனை செய்ய வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.  இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

Tags:    

Similar News