நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் வளர்ச்சி தடைப்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-25 12:17 GMT

 நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் மூவாயிரம் உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் 3000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும். அரசு பேருந்துகளில் மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயண வசதி வழங்க வேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோருக்கு கடும் ஊனமுற்றோர் என்று அறிவித்து திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ப வகையில் அரசு வீடுகள் கட்டித்தர வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உயர் வளர்ச்சி தடைபட்டோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News