நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-28 08:53 GMT

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

கால்நடைகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடைகளை பாதுகாக்கப்பட வேண்டும். வனத்துறை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகளும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முகமது அலி கூறும்போது- தமிழகத்தில் வனத்துறை பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு காரணம் தமிழக அரசுதான். ஆகவே இந்த கால்நடைகளை வனத்துறை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் கால்நடைகளை இல்லாத சூழ்நிலையில் மாறிவிடும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News