Pss Theatre Tirunelveli Ticket Booking திருநெல்வேலி பிஎஸ்எஸ் தியேட்டரில் ஆன்லைன் டிக்கெட் புக் வசதி உண்டா?....

Pss Theatre Tirunelveli Ticket Booking திருநெல்வேலி மாநகரில் அமைந்துள் பிஎஸ்எஸ் தியேட்டரில் ஆன்லைன் முன்பதிவும் செய்யலாம். டிக்கெட்டின் விலை என்னென்ன என கேட்கிறீர்களா? படிச்சு பாருங்களேன்...

Update: 2023-10-10 08:33 GMT

திருநெல்வேலியிலுள்ள பிஎஸ்எஸ்  மல்டிபிளக்ஸ் தியேட்டரின் முகப்பு தோற்றம்  (கோப்பு படம்)

Pss Theatre Tirunelveli Ticket Booking

தமிழகத்தினைப் பொறுத்தவரை என்னதான் சேட்டிலைட் சேனல்கள், ஹாட் ஸ்டார்,ஜியோடிவி என ஆப்கள் வசதி வாய்ப்பு இருந்தாலும் தியேட்டரில் போய் படம் பார்க்கும் திருப்தி இதில் வருமாங்க...என கேட்டீர்களானால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில படங்களை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்த்தால்தான் நமக்கே படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. என்னதான் வீட்டினுள் நீங்கள் பெரிய திரையுடைய டிவியை வைத்து ஹோம் தியேட்டரில் பார்த்தாலும் தியேட்டருக்கு சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து பார்க்கும் பரம திருப்தி வீட்டில் பார்க்கும் போது இருக்காதுன்னேன்...

அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தியேட்டரில் சென்று பார்க்கவே பலர் விரும்புகின்றனர். ரஜினியின் தற்போதைய வரவான ஜெயிலர், கமலின் விக்ரம், விஜயின் மாஸ்டர், அஜீத் நடித்த படங்கள் உள்ளிட்டவைகளை தியேட்டரில் ரசிகர்கள் அடிக்கும் லுாட்டியோடு படம் பார்த்தால்தான் நமக்கே பரம திருப்தி ஏற்படுகிறது என நான் சொல்லவில்லை. தமிழக மக்கள் சொல்கின்றனர்.

Pss Theatre Tirunelveli Ticket Booking



முன்பெல்லாம் தியேட்டர் என்று சொன்னால் ஒரே ஒரு தியேட்டர் தனிக்கட்டிடமாக இருக்கும். அதில் ஒரே படம் மட்டும் திரையிடப்பட்டு ஓடும். நாளடைவில் இது இரண்டானது. பின் நாட்கள் செல்ல செல்ல ஒரே கட்டிடத்தில் 3தியேட்டர்களைக்கொண்ட கட்டிடம் அமைத்தனர். தற்போது ஒரே கட்டிடத்தில் 4 திரைகளைக் கொண்ட 4 தியேட்டர்கள் அதாவது மல்டிபிளக்ஸ் என பெயரிடப்பட்டு மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இன்று திரைப்படங்களைத் திரையிட்டு கொடி கட்டி பறப்பதோடு படம் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் போட்ட காசை எடுத்து கல்லா கட்டிவிடுகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...

அக்காலத்தில் படம் பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்கே நேரடியாக சென்று டிக்கெட் வாங்கி அவசர அவசரமாக சென்று இருக்கையில் அமர்ந்து பார்க்கவேண்டிய நிலை இருந்தது. நாகரிகம் வளர வளர டிக்கெட்டையும் நீங்கள் டிஜிட்டலில் அதாவது புக் மை ஸோ எனும் ஆப்பில் ஆன்லைனில் ரிசர்வ் செய்யும் வசதி வந்துவிட்டது. அடித்து பிடித்துஓடி வந்து இருக்கையைப் பிடிக்க வேண்டிய நிலையானது தவிர்க்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் அல்வா என்று சொன்னால் திருநெல்வேலி என்ற ஊர்தான்ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு பெயர் பெற்ற தாமிரபரணி நதி ஓடும் நகரில் அமைந்துள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்தான் பிஎஸ்எஸ். இந்த தியேட்டரில் மொத்தம் 4 ஸ்கிரீன்கள் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு படங்கள் திரையிடப்படுகின்றன.

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள திரையரங்குகளை நீங்கள் தேடுகிறீர்களானால், PSS மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குச் செல்லவும்.. PSS Multiplex ஆனது BookMyShow மற்றும் Paytm போன்ற முன்பதிவு தளங்களில் ஆன்லைன் டிக்கெட் முறையை தொடங்கியுள்ளது. இந்த திரையரங்கில் அனைத்து வகையான திரைப்படங்களும் வெளியாகும். அனைத்து சமீபத்திய திரைப்படங்களையும் இங்கே பதிவு செய்து இப்போதே முன்பதிவு செய்யுங்கள்.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு @PSS Multiplex

PSS Multiplex திருநெல்வேலியில் டிக்கெட் விலை வரம்பு

100 ரூபாய்க்கு கீழே

ரூ.100 முதல் ரூ.199

ரூ.200 முதல் ரூ.299

ரூ.300 முதல் ரூ.399

ரூ 400 அல்லது அதற்கு மேல்

Pss Theatre Tirunelveli Ticket Booking


PSS Multiplex திருநெல்வேலியில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

திருநெல்வேலி PSS Multiplex இல் திரைப்படம் பார்க்க, ஆன்லைன் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, BookMyShow அல்லது Paytm போன்ற முன்பதிவு தளங்களைப் பார்வையிடவும்

அவர்களின் முகப்புப் பக்கத்தில், திருநெல்வேலி நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேடலில் “PSS Multiplex Tirunelveli” என்று தேடவும்

இப்போது நீங்கள் PSS Multiplex திருநெல்வேலி முகப்புப் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்

திரைப்படத்தின் பெயரைத் தேடி, நீங்கள் திரைப்படத்தைப் பார்க்க விரும்பும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

இருக்கைகள் மற்றும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து கட்டணம் செலுத்த தொடரவும்

பணம் செலுத்தலாம் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் டிக்கெட்டுகள் அனுப்பப்படும்.

பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திருநெல்வேலி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மேலும் கேட்கப்பட்ட கேள்விகள்

pss மல்டிபிளக்ஸ் திருநெல்வேலியில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளதா?

ஆம், pss மல்டிபிளக்ஸ் திருநெல்வேலியில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை உள்ளது. BookMyShow அல்லது Paytm மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் அம்சங்கள் என்ன?

MTicket, பார்க்கிங் வசதி மற்றும் உணவு விடுதி போன்ற அனைத்து வசதிகளும் PSS Multiplex திருநெல்வேலியில் உள்ளன.

PSS Multiplex ன் டிக்கெட் விலை வரம்பு என்ன?

PSS Multiplex திருநெல்வேலியின் டிக்கெட் விலை வரம்பு ரூ 100 முதல் ரூ 300 வரை

நீங்கள் PSS மல்டிப்ளெக்ஸில் முன்பதிவு செய்கிறீர்களா?

விதிமுறைகளும் நிபந்தனைகளும் படிச்சு பாருங்க....

Pss Theatre Tirunelveli Ticket Booking


*புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் புகையிலை மெல்லுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. போதையில் இருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

*தியேட்டர் வளாகத்திற்குள் லுங்கி அணிந்து செல்ல அனுமதி இல்லை.

*ஒருமுறை வாங்கிய டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ, மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது.

*`A` சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிக்க முடியாது.

*3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்கவும்.

*திரையரங்கு வளாகத்திற்குள் வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

*திரைப்படம் முடிந்து வெளியேறும் நேரத்தில் உங்கள் 3டி கண்ணாடிகளை தயவுசெய்து திருப்பித் தரவும்.

* 3டி கண்ணாடிகள் சேதம் அல்லது இழப்பு 2400.00 செலவாகும்.

*திரையரங்கிற்கு வெளியே இந்தக் கண்ணாடிகளை அணிய வேண்டாம்.

சரிங்க....தியேட்டரில் என்னென்ன படம் ஓடுகிறது என தெரிய வேண்டுமா. இன்றைய தேதி நிலவரப்படி ஸ்கிரீன் 3 ல்  சந்திரமுகி 2 திரையிடப்பட்டுள்ளதுங்க... அதேபோல்  ரத்தினம்,800 தி மூவி, இறுகபற்று, சித்தா, தி எக்ஸார்ஸிட்ப்ளீவர் என்ற திரைப்படங்களும்  நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி திரையிடப்படுகிறது. இந்த அனைத்து  ஸ்கிரீன்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி உண்டு. ஆப்லைனிலும் பெறலாம்.  கோல்டு டிக்கெட்  ரூ. 190 க்கும், எலைட் டிக்கெட் ரூ. 150க்கும், பட்ஜெட் டிக்கெட் ரூ. 100க்கும்  தரப்படுகிறது. ஆன்லைனில் பதிவுசெய்வோர் பெரும்பாலும் கோல்டு டிக்கெட்களையே விரும்பி முன்பதிவு செய்கின்றனர். காரணம் இது சற்று தொலைவிலானது என்பதுதான் பிளஸ் பாயிண்ட்.  

Tags:    

Similar News