நெல்லையில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-12-20 12:47 GMT

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.12.2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெறவும், முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் குறித்து அறியவும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம்.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் உதவி இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News