முத்து மனோ கொலை வழக்கு தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-06-28 06:00 GMT

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைவாசி முத்து மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்து மனோ உறவினர்கள் மற்றும் வாகைகுளம் பொதுமக்கள் உடலை வாங்க 70 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்து தங்களது ஆதார் கார்டை ஆட்சியரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதுகாப்பை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசி முத்து மனோ உடலை பெற்று அடக்கம் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது நாளைக்குள் உடலை பெறாவிட்டால் அரசே அடக்கம் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News