நெல்லை வரதராஜ பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

நெல்லை, மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

Update: 2022-04-23 00:30 GMT

மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்வாமி. 

நெல்லை மாவட்டத்தில்,  பழமையான வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக,  நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்கு, சித்திரை பிரம்மோற்சவ திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 11 நாட்களாக  நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான,  8ம் திருநாள் சுவாமி குதிரை வாகன புறப்பாடு, நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதை முன்னிட்டு,  கோவில்நடை  நேற்று அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜையும், காலையில் வெள்ளிப் பல்லக்கில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி திருவீதி உலா, தேர் கடாக்ஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,  4 ரத வீதிகள் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெற்று மீண்டும் திருக்கோவில் வந்தடைந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News