நெல்லை: வாக்குப்பதிவு மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவினை வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-18 15:20 GMT

நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவினை வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை ஆட்சியர் விஷ்னு பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவினை வெப் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்னு பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில், வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தமாக 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மாநகரத்தில் பொருத்தவரையில் 55 வார்டுகளில் 491 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டு அவைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் 143 பதற்றமான வாக்குச்சாவடிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் 35 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 17 பேரூராட்சிகளில் 40 பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு அவை முழுமைக்கும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிகாரிகளின் தலைமையில் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு தொடக்கி வைத்தார்.

Tags:    

Similar News