நெல்லையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர் காெடுத்து வரவேற்ற எம்எல்ஏ

பள்ளிகளுக்கு வந்த மாணவ- மாணவிகளை எம்எல்ஏ அப்துல் வகாப் ரோஸ் பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்களோடு வரவேற்றார்.

Update: 2021-11-02 07:07 GMT

நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவ- மாணவிகளை எம்எல்ஏ அப்துல் வகாப் ரோஸ் பூ கொடுத்தும், இனிப்பு வழங்கியும் ஆசிரியர்களோடு வரவேற்றார்.

பள்ளிகளுக்கு வந்த மாணவ- மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ரோஸ் பூ கொடுத்தும், லட்டு வழங்கியும் ஆசிரியர்களோடு வரவேற்றார்.

கொரோனா ஊரடங்கு நோய் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து தமிழக அரசு 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நேற்று முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நேற்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவித்து. நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் மழையின் அளவு குறையத் தொடங்கி, அதை தொடர்ந்து இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் செயல்படத் தொடங்கின. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1500 பள்ளிகள் இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ரோஸ் பூ கொடுத்தும், லட்டு வழங்கியும் ஆசிரியர்களோடு வரவேற்றார்.

நெல்லை பாளையங்கோட்டை கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரவேற்கும் விதமாக பறை செய்தும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு பள்ளி குறித்த புத்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான அறிவுரைகளை வழங்கி இன்று முதல் பள்ளிகளில் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். முதல் 15 நாட்களுக்கு தமிழக அரசின் உத்தரவுப்படி மாணவர்களை மனமகிழ்வுடன் வைக்கும்படியான பயிற்சிகள் மற்றும் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஓவியம் பாடல் கற்பித்தல் போன்ற வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  விஜிலா சத்தியானந்த் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News