கலாம் விவேக் - மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Update: 2021-04-19 09:30 GMT

திருநெல்வேலியில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அவர் பெயர் சூட்டப்பட்ட மரக்கன்று நடப்பட்டது.

திருநெல்வேலி சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு சார்பில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கலாம் விவேக் என்று பெயர் சூட்டப்பட்ட மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்ட செயலாளர்கள் விஸ்வநாதன், சக்தி, மாவட்ட பொருளாளர் நாகராஜ் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News