நெல்லையில் மனநலம் பாதித்தவர்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியர் வழங்கல்

மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கினார்.

Update: 2021-10-30 14:18 GMT

ஆதரவற்றோர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து செயல்படுத்தவுள்ள நடமாடும் உணவு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனையில் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து செயல்படுத்தவுள்ள நடமாடும் உணவு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.

ஆர்சோயா டிரஸ்ட் மற்றும் பேனியன் டிரஸ்ட் மூலம் ஆதரவற்றோர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கும் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 19 மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆதரவற்றோர்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து திருநெல்வேலி மாநகராட்சி உதவியுடன் செயல்படுத்தவுள்ள நடமாடும் உணவு வாகனத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் ஆதரவற்றோர் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வாக அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம், திருநெல்வேலி வட்டாட்சியர் சண்முகம், ஆர்சோயா தொண்டு நிறுவன காப்பாளர் சரவணன், ஆதரவற்ற மன நல பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்குபவர் கேப்ரியல், மாரிமுத்து, மற்றும் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News