நெல்லையில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.

Update: 2022-05-06 12:19 GMT

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தமிழகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பல லட்சக்கணக்கான குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு நிலங்களை பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்கள், மடத்து நிலங்களில் கூடியவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்கள் மடத்து நிலங்களை நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு குத்தகைக் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் தொண்டர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோரிக்கை மனுவை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்த போராட்டத்தினால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News