புதியதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்த ஆட்சியா்

சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-04-20 16:43 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு  புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள சத்திரம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவியர்களுக்கு தனியார் டயர் நிறுவனத்தின் சார்பில் ரூ 70 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பள்ளியில் பெண்களுக்கான கழிப்பிட வசதி, மாணவ- மாணவியர்கள் உட்கார்ந்து படிக்க சேர், டெஸ்க், மின்விசிறி, பள்ளி ஆய்வக உபகரணங்கள், கம்ப்யூட்டர் லேப், மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்ததை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாரணம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி, தனியார் டயர் கம்பெனியின் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர் அலெக்ஸ் சகாயராஜ், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News