மானூர் ஒன்றியத்தில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம்

மானூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

Update: 2021-09-30 06:30 GMT

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் 4 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக,  அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா வாக்கு சேகரித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் 4வது வார்டு, புதூர் ஊராட்சியில், மாவட்ட கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருள்மதி பாலமுருகன் மற்றும் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளரான,  ஒன்றிய கவுன்சில் பதவிக்குப் போட்டியிடும் செல்லத்தாய் காளியப்பன் ஆகியோருக்கு, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை-கணேசராஜா வீதி வீதியாக சென்று, பொது மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டார்.

அப்போது, அவருடன் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்‌, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், மற்றும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News