நெல்லை மாநகராட்சியில் 3வது வார்டில் திமுக சார்பில் 3 பேர் வேட்பு மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சியில் 3 வார்டில் ஒரே கட்சியை சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவத்தால் பெரும் பரபரப்பு.

Update: 2022-02-04 15:48 GMT

நெல்லை மாநகராட்சி 3வது வார்டுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். 

நெல்லை மாநகராட்சி வார்டு எண் 3 ல் திமுக சார்பில் 3 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல். நெல்லை மாநகராட்சி தேர்தலில் 3 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மூன்றாவது நபராக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் அமைந்துள்ள 55 வார்டுகளில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி வார்டு எண் 3ல் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக முன்னாள் மாநகராட்சி தச்சை மண்டல சேர்மன் சுப்பிரமணியன் என்பவரை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்றைய தினம் காலை மணிக்கு தச்சை மண்டல தேர்தல் வேட்புமனு பெறும் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஐயப்பனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அதே மூன்றாவது வார்டுக்கு மைதீன் மல்கர் என்பவரும் திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் வேட்பு மனு முடிவடையும் நேரத்தில் திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 3வது வார்டுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜாவும் தச்சை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். ஒரே வார்டுக்கு ஒரே கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் 7 ம் தேதி நடைபெறும் வேட்புமனு திரும்பப்பெறும் நேரம் முடிவடையும் 3 மணிக்குள் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஐ மூன்றில் எந்த வேட்பாளர் சமர்ப்பிக்கிறாரோ அந்த வேட்பாளர் மட்டுமே கட்சி சார்ந்த வேட்பாளர் என கருதப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News