மத்தியபிரதேச மாநில முதல்வருக்கு திருச்சி கலெக்டர் சிவராசு வரவேற்பு

மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு திருச்சி கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Update: 2021-11-23 16:32 GMT
திருச்சிக்கு வந்த  மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு விமான நிலையத்தில் கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக இருப்பவர் சிவ்ராஜ் சிங் சவுகான். இவர் இன்று தனது மனைவியுடன் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். வரவேற்பு முடிந்ததும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News