கடும் குளிரால் வடமாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கடும் குளிரில் வடமாநிலங்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. இதனால், மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2023-01-08 07:15 GMT

வடமாநிலங்களில் கடும் குளிரால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாக பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. ராஜஸ்தானின் சுடு பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் டில்லியின் அயநகர் பகுதியில் 1.8 டிகிரி செல்சியஸும், பஞ்சாபின் அமிர்தசரஸில் 5 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின், 33 மாவட்டங்களில் 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வழக்கத்தை விட குளிர் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். புதுடில்லியில் 1.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட குளிர் மற்றும் பனிப்பொழிவால் மக்கள் கடும் அவதியை எதிர்நோக்கி வருகின்றனர். ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 36 ரயில்கள் நேரம் தவறி தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. குளிர் பிரதேசங்களான தர்மசாலா, டேராடூனை விட புதுடில்லியில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால், குளிரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, வடமாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News