கட்டுமான வல்லுநர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம்

தேனியில் கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தமும் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.

Update: 2021-02-12 17:11 GMT

        சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து தேனி மாவட்ட அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தமும் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. தேனி பங்களா மேட்டில் அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மைய தலைவர் சுப்பையா இளம்வழுதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிமெண்ட் மற்றும் கம்பி விலையை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கவும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், இரும்புக் கம்பிகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட அகில இந்திய கட்டுனர் சங்கம் கட்டிட பொறியாளர் சங்கம், ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Similar News