தென்காசியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்

Update: 2022-01-17 03:20 GMT

முதியவர் உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.வினர்.

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தமுமுகவின் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நியாஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த தமுமுக மாவட்ட தலைவர் சலீம் தலைமையில், மாநில ஊடகப் பிரிவு துணைச் செயலாளர் ஆதம் காசியார், வடகரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆசிக், 9-வார்டு மாணவரணி செயலாளர் வருங்காலம் கனி மற்றும் நிர்வாகிகள் விரைந்து சென்றனர்.

பின்னர் தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் கபிர்தாசன் வழிகாட்டுதலோடு இறந்தவருக்கு புதிய ஆடைகள் அணிவித்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்று தென்காசி ஆயிரப்பேரி ரோடு அருகில் இருக்கக்கூடிய அடக்க ஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Similar News