குற்றாலம் அருவிகளில் கோடை மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

குற்றாலம் அருவிகளில் கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்

Update: 2022-04-10 00:30 GMT

கோடை மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலங்களாகும்.

இங்குள்ள குற்றாலம் பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் கடந்த ஒரு மாத காலமாக நீர் வரத்து முழுமையாக நின்ற நிலையில் அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டது. இதனால் குளிப்பதற்காக வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் கோடைமழை பெய்து வருகிறது. இதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளிலும் கோடை மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் நீர் வரத் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News