தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2022-01-25 00:15 GMT

தென்காசி மாவட்டத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு,  6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்,  வாக்குச்சாவடி வாரியாக, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் உள்ள வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்கள் விவரத்தினை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான ''tnsec.tn.nic.in'இல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறத்திலுள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகள் விவரங்களை அறிய, மேற்காணும் இணையதளவசதியை பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும்,  விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பட்டியல்களில் இடம்பெறாத வாக்காளர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்து உரிய சேர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News