தென்காசி அருகே கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

தென்காசி அருகே ஆதி திராவிட நலத்துறையை கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.

Update: 2023-01-20 03:41 GMT

வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.

தென்காசி அருகே பொதுமக்கள் தாங்கள் மொத்தமாக வாங்கிய இடத்தில் பயன்பாடு இல்லாமல் வைத்திருந்த இடத்தை தங்களுக்கு தெரியாமல் ஆதி திராவிட நலத்துறை கையகப்படுத்தியதாக கூறி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தென்காசி அருகே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் திமுக நிர்வாகியை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இதனல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் நகரில் சுரண்டை செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு பக்கமும் தலா 7 வீடுகள் வீதம் 14 வீடுகள் உள்ளன இந்த 14 வீடுகளில் தற்போது வசித்து வருபவர்களின் மூதாதையர்கள் 1980 ம் ஆண்டு மாசாணம் என்பவரிடம் இருந்து 56 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளனர் இதில் 14 வீடுகள் கட்டியது இரண்டு பக்கங்களிலும் தலா இரண்டரை சென்ட் இடத்தினை தங்களுடைய பொது பயன்பாட்டிற்காக வைத்துள்ளனர்.

இந்த இடத்தின் பின் பகுதியில் இரண்டு தனிநபர்கள் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்திற்கு பாதை வேறு வழியாக உள்ளது. ஆனால் இந்த இரண்டரை சென்ட் நிலத்தில் நடந்து சென்று வந்துள்ளனர். தற்போது அந்த இடம் வழியாக மின் இணைப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு இடத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு வீட்டுக்காரர்கள் அங்குள்ள திமுக நிர்வாகியை அணுகி அவர் மூலம் பஞ்சாயத்து மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்த இடம் வழியாக தான்மின் இணைப்பு வழங்குவோம் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்க இதனை கண்டித்து அந்த வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News