முப்புலியூரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

முப்புலியூரில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-08 08:01 GMT

முப்புலியூர் கிராமத்தில் பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் வெள்ளச்சாமி  ஆலோசனையின் படி, இன்று முப்புலியூர் கிராமத்தில் பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் காசநோய் அறிகுறிகள் கண்டவர்களுக்கு நடமாடும் அதிநவீன வாகனத்தின் மூலம் சளி பரிசோதனை மற்றும் நுண்கதிர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நலக்கல்வியாளர் மாரிமுத்துசாமி காச நோயின் அறிகுறிகள் மற்றும் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.

மருத்துவர் சதிஷ்குமார் ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாட்டினை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் முருகராஜ், முப்புலியூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News