குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: வியாபாரிகள் மகிழ்ச்சி

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2024-08-11 04:50 GMT

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, குளிக்க அனுமதி இல்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி,தேனருவி என பல அருவிகள் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்  ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். அதேபோல் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் இரண்டு மாத காலங்களாகும்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் குற்றாலம் பிரதான அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

நேற்று இன்றும் விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலை,குற்றாலம் பழைய குற்றாலம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News