ரூ.7 லட்சம் மதிப்பு நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தென்காசி காவல்துறை

District Police -தென்காசியில் ரூ.7 லட்சம் மதிப்பு நிலத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2022-09-20 03:16 GMT

ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

District Police -தென்காசி மாவட்டம், இராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய ஆறு நபர்களுக்கு பாத்தியப்பட்ட ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை,கடைக்குட்டி தம்பியான சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்ததாக சரோஜினி கடந்த 06/09/2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. சந்திச்செல்வி  துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி நிலத்தை அபகரித்த சந்திரன் என்பவரிடம் ஆவணம் ரத்து செய்யப்பட்டது.

பின்பு மீட்கப்பட்ட நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ்  முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலத்தைப் பெற்றுக் கொண்ட தங்கராசு மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News