தென்காசி: சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்தார்.

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

Update: 2021-08-15 06:10 GMT

தென்காசியில் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியகொடியை ஏற்றி வைத்து, கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா வையொட்டி தென்காசி மாவட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.இதில், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உடன் இணைந்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், சமாதானப் புறா மற்றும் மூவர்ண பலூனை பறக்கவிட்டார்.



 இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

 கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் .குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News