தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் - பல தீர்மானங்கள் நிறைவேற்றம்

தென்காசி ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2021-11-25 06:00 GMT

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின்  முதல் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த  நிலையில் தென்காசி ஒன்றியதிற்கான முதல் கூட்டம்,  ஒன்றிய தலைவர் சேக் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன்,  ஊராட்சி ஒன்றிய பகுதியில் இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள், மாற்றி புதிய கட்டிடங்கள் கட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள், இந்த முதலாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News