கொரோனா பரவல்: தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரளா எல்லையில், தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-01-17 00:30 GMT

தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடிபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் எஸ்.பி.பேசியதாவது: சபரிமலையில் மண்டல பூஜை காரணமாக ஏராளமான வாகன போக்குவரத்துக்கு இருந்து வந்தது. தற்போது அந்த வாகன போக்குவரத்து பிரிக்கப்பட்டு,  கனரக வாகனங்கள் காவல்துறை சோதனை சாவடியிலும், பிற வாகனங்கள் கொரோனோ கண்காணிப்பு சோதனை சாவடிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில்,  இரண்டு எல்லைப் பகுதிகளில் இரண்டு சோதனைச் சாவடிகள் செயல்பட்டு வருகிறது.

இதில் ஒன்று, புளியரை மற்றொன்று மேக்கரை சோதனைச்சாவடி. இந்த சோதனைச்சாவடி மூன்று மாதங்களாகக் மூடப்பட்டு வந்த வந்த நிலையில் கேரள மாநில அரசின் வேண்டுகோளையேற்று தற்போது சபரிமலை சீசன் காலத்திற்காக திறக்கப்பட்டது.  மேக்கரை பகுதியில் கொரோனோ கண்காணிப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தியவர்கள்,சோதனைச்சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை,  முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் 15ஆம் தேதி முதல் தொடங்கி,  சோதனைகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டிய 250 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடி அபராதமாக 35 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கபட்டது. விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 2450 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முக்கிய நுழைவு பகுதிகளில் இருபத்தி ஐந்து சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News