தென்காசி : சிவாஜி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை

தென்காசியில் சிவாஜி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-07-21 07:44 GMT

தென்காசியில் சிவாஜி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவாஜியின் 20 -ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தென்காசியில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. காந்தி சிலை முன்பு, அலங்கரிக்கப்பட்ட சிவாஜியின் உருவப்படத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகர தலைவர் காதர் மைதீன், சிவாஜி மன்றம் கணேசன், இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர் சந்தோஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News