தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 12:47 GMT

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி ஸ்ரீகுமார் செண்டை மேளம் முழங்க 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வேட்போனு தாக்கல் செய்தார்.

முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.

அதன்பின்பு செய்தியாளர்கள சந்தித்த ராணிஸ்ரீ குமார் தமிழக முதல்வர் என்னை இந்த தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். தற்போது வைப்பு மனு தாக்கல் செய்யும்போது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றேன். எனது வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தார்,

வேட்பு மனு தாக்களின் போது திமுக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News