தென்காசி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி உத்தேச வேட்பாளர் பட்டியல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

Update: 2024-03-13 14:46 GMT
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரகாந்த் செந்தில்

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய அளவிலும், மாநில அளவிலும், கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 தொகுதிகள் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் என்றும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று முடிவாகியுள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதேபோல் தென்காசி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாக தகவல் வெளியான நிலையில் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந் செந்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற  லெனின் பிரசாத், தென்காசி மாவட்ட துணைத்தலைவர் சங்கை கணேசன்,சங்கரன்கோவில் நகர தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினருமான உமா சங்கர், தென்காசி நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் என ஐந்து பேரின் பெயர் வெளியாகியுள்ளது.


அதேபோல் மற்ற  கட்சிகளும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. பாஜக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. அதேபோல் ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News