காசிவிஸ்வநாதர் ஆலயம்,பள்ளிவாசல் வழக்கில் இன்று தீர்ப்பு : போலீஸ் பாதுகாப்பு

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள பள்ளிவாசல் வழக்கில் இன்று மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

Update: 2021-04-30 05:23 GMT

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் 

தென்காசி மாவட்டம்,  தென்காசி அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு 50 மீட்டர் தூரத்தில் தென்காசி சார்பு அமர்வு நீதிமன்றம் எதிரில் அம்மன் சன்னதி தெருவில் சுமார் 1000 சதுர அடி அளவு கொண்ட பஜார் பள்ளிவாசல்  இடத்தை 1981-ம் ஆண்டு தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக, கோவில் கட்டளை சொத்தை பரமாரித்து வந்த வேலாயுதம்பிள்ளை என்பவரிடமிருந்து மேற்படி இடம்  கிரையம் செய்யப்பட்டது. மேற்படி பள்ளிவாசலை 2006-ம் வருடம் மராமத்து பணிகள் செய்தபோது தென்காசியை சேர்ந்த குமார் பாண்டியன் த/பெ சொர்ண தேவர், மலையான் தெரு என்பவர் பிரச்சினை செய்தபோது 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி   தேதி மேற்படி குமார் பாண்டியனை ஹனிபா, சுனையல் சுலைமான், முருகேசன் அப்துல்லா ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பான பிரச்னையில் இரு தரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தாதால் பதற்றம் நிலவியது. 

மேற்படி தென்காசி பஜார் பள்ளிவாசல் ஜமாத்தினர் 2014-ம் வருடம் மேற்படி பள்ளிவாசல் கட்டுவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். மேற்படி வழக்கில் விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றம் கிளை (WP no 16969/ 2014 ) மேற்படி வழக்கின் தீர்ப்பை 19 -11- 2019 -ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு   மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  இன்று (30 ம் தேதி ) வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News