தென்காசியில் குழந்தைகள் ராதை கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், ராதை கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-08-20 03:00 GMT
கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்ற குழந்தைகள்.

நாடு முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்திவிழா நேற்று கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசியில் 8-வது ஆண்டாக, விஷ்வஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு நகரத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் . மாவட்டச் செயலாளர்கள் முருகன், தளவாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, முருகர் வேடமணிந்து கலந்து கொண்டனர். காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து குழந்தைகள் ஊர்வலம் தொடங்கியது. பேரணி நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து மீண்டும் காகி விசுவநாதர் ஆலயத்தை வந்தடைந்தது.

பேரணியில் கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகள் புல்லாங்குழலுடனும், ராதை வேடமணிந்த குழந்தைகள் கையில் வெண்ணெய் பானையுடனும் கலந்து கொண்டு ராம ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். கொரோனா தடையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. முடிவில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பஜ்ரங்குதள் அமைப்பாளர் சபரி மணி, இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, நகரத் தலைவர் நாராயணன், பாஜக நிர்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், சுனிதா, மேலகரம் மகேஸ்வரன், ராஜ்குமார், முருகன், பெருமாள், பாண்டுரங்கன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News