தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலால் கோவில்கள் மூடல்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

Update: 2022-01-07 13:03 GMT

மூடப்பட்டுள்ள கோவில்.

நாடு முழுவதும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களான சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம், தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களும் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது.

அரசு கோவில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News