பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-31 07:48 GMT

புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு பதற்றமான சூழல் நிலவும் நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஊதியமமின்றி பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் நியமன கால முதல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News