27 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு: தென்காசியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

.27 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

Update: 2022-01-09 11:43 GMT

தென்காசியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.27 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் வெறிச்சோடியது.


தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரங்கு கடைபிடிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆலங்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டும், மருந்தகம், பால், உணவு விடுதிகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசி நகரில் நகருக்குள் நுழையும் நான்கு பகுதிகளிலும் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய காரணங்களைத் தவிர முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களை காவல்துறையினர் தண்டம் விதித்தும், எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் 27 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் ஆயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News