தென்காசி வழித்தடத்தில் தீபாவளிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்தில் ரயில்வே சார்பில் தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்.

Update: 2021-11-02 05:06 GMT

கோப்பு படம்

திருநெல்வேலி - தென்காசி ரயில் வழித்தடத்தில் மக்களுக்கு ரயில்வே சார்பில் தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்.

தீபாவளி முடிந்து சென்னை செல்பவர்களுக்கு நவம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவு (02.11.21) காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Tags:    

Similar News