தென்காசி: சித்தா சிறப்பு சிகிச்சை மையம் கலெக்டர் ஆய்வு

Update: 2021-05-21 09:10 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கோவிட் - 19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (Unified Command Centre) மாவட்ட ஆட்சியர் சமீரன் பார்வையிட்டு, ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரிடம் எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து, ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா அறிவியல் கலைக்கல்லூரியில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவு முறைகளை கேட்டறிந்தனர். பின்னர், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைத்துப்பகுதிகளிலும் கபசுர குடிநீர் தினந்தோறும் வழங்குவதற்கும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள சித்த பொருட்களை பொதுமக்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் நல்ல முறையில் வழங்கிட அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில்  சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யோகானந்த், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டர்.

Tags:    

Similar News