ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-13 07:25 GMT

பாதுகாவலர் பார்த்திபன்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுவதற்காக ஜல்லிகட்டு ஆணையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வருகை தந்துள்ளார். அவருடன் பாதுகாவலர் பார்த்திபன்(50) வந்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்கள் கடந்த 4 நாட்களாக பழைய குற்றாம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நீதிபதியுடன் பாதுகாவலாரக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் கழிவறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவரது மனைவி தீபா, இவர்களுக்கு யுவராஜ், கேசிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1997ல் பணியில் சேர்ந்த இவர் 2000ல் ஆயுதப்படையில் பணியாற்றினார். மேலும் இவர்க்கு 10ஆண்டுகள் பணிகாலம் உள்ளது.

சம்பவ இடத்திற்கு உதவி காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News