நில அளவை பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த கோரிக்கை

தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில், 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Update: 2021-09-11 10:45 GMT

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலத்தலைவர் சண்முகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

தென்காசியில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர் சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திர குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நில அளவைத்துறை களப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் புதிய நில அளவை பணியாளர்களை நிரப்பிட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன நில அளவையை செய்யும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும். புதிய பணியாளர்களை கொண்டு நில அளவைப் பணியை மேற்கொள்ள வேண்டும். நவீன நில அளவையில் உள்ள குழப்பங்களை களைய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

கூட்டத்தினிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சில சலுகைகளை விரிவுபடுத்தி அதை அரசே ஏற்க வேண்டும். ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். பல துறைகளில் உள்ள துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க கூட்டுமன்ற கூட்டங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News