பஞ்சாப் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மனு

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

Update: 2022-01-11 13:01 GMT

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பாரத பிரதமர் மோடி பஞ்சாப்பில் ஒரு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் அங்கு 7 ஆயிரம் பேர் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போதிய கூட்டம் இல்லாமல் வெறும் 500 பேர் மட்டுமே வந்துள்ளனர். இதனை அறிந்த பிரதமர் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு பஞ்சாபில் எனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி திரும்பி சென்று விட்டு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டார்.

இதனைக் காரணமாகக் கூறி பஞ்சாபில் ஆட்சியை கலைத்துவிட வேண்டும். என்று கூறி வருகிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் அனைவரின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று பொய் கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போதும் ஒரு பொய்யை கூறி வருகிறார்கள். இரண்டாவது முறை வெற்றி பெற்றால் பெட்ரோல் டீசல் விலை ரூ 35க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறி வெற்றி பெற்றார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 தாண்டி உள்ளது.

இப்படி பெரும் பொய்யை கூறும் பிரதமரை கண்டித்து ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளோம் என அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News