23 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-11 12:24 GMT

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சித்திரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காலதாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும், பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், ஓய்வு பெற்ற செயலாளர்களுக்கு நிதி பயன்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் கூட்டுறவுத் துறையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வருகின்ற 25ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News