தென்காசி மாவட்டத்தில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 16:10 GMT

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தென்காசியில் அக்டோபர் 6ம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபர் 9ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 15ம் தேதியும், வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை 23ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுவை வாபஸ் இறுதி நாள் 25ம் தேதி, தேர்தல் வாக்கு பதிவு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது. ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடக்கிறது.

மற்ற காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல், இரண்டாம் கட்டமாக கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்காேவில், செங்காேட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும்அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News