தென்காசி நகர திமுக அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடட்டம்

தென்காசி நகர தி.மு.க சார்பில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த பெரியாரின்உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்

Update: 2022-09-18 01:00 GMT

பெரியாரின் உருவப் படத்திற்கு தென்காசி நகர்மன்ற தலைவரும், தி.மு.க நகர செயலாளருமான சாதிர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

தென்காசி நகர திமுக அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி நகர திமுக அலுவலகத்தில் பெரியாரின் 144 - வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நகர தி.மு.க சார்பில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்திற்கு தென்காசி நகர்மன்ற தலைவரும், தி.மு.க நகர செயலாளருமான சாதிர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து சமூக நீதியை நிலை நாட்டுவதற்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது. இவ்விழாவில் நகர் மன்ற துணைத்தலைவர் சுப்பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா, நகரப் பொருளாளர் ஷேக் பரீத், மற்றும் கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News