தென்காசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

தென்காசி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் திறந்து வைத்தார்.

Update: 2021-10-08 00:30 GMT

தென்காசி அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை,  மாவட்ட வருவாய்அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 1000LPM(litres per minute) அளவிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையம், சுமார் 1.2 கோடி அளவில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை நாடு முழுவதும் நேற்று, காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட தலைமை அரசுமருத்துவமனையில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சவுந்தர்யா தலைமை வகித்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், PSA plant உபகரணங்களை தொடங்கி வைத்து அவற்றை பார்வையிட்டார்.

இங்கு, 1000 கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் மூலம் நோயாளிகள் தடையின்றி தொடர்ந்து ஆக்சிஜன் கிடைக்கப்பெறுவர். இதன் மூலம் இனி தென்காசி மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்கப் பெற்று, பொதுமக்கள் பயன் பெறுவர் என்று தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News