வீராணம் காசிக்கு வாய்த்தான் கால்வாயில் பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

வீராணம்: விவசாய பணிகளுக்கு செல்ல பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை. அதிகாரிகள் ஆய்வு.

Update: 2021-11-24 12:00 GMT

வீராணம் காசிக்கு வாய்த்தான் கால்வாயில் பாலம் அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வீராணம் காசிக்கு வாய்த்தான் கால்வாயின் விவசாய பணிகளுக்கு செல்ல பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீராணம் பெரியகுளத்தில் இருந்து காசிக்கு வாய்த்தான் கால்வாயில் கிடாரக்குளம் செல்லும் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய பணிகளுக்கு இப்பகுதி விவசாயிகள் காசிக்கு வாய்த்தான் கால்வாயில் பாலங்கள் இல்லாததால் தண்ணீர் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடும் வெள்ளம் மற்றும் மழை காலங்களில் இப்பகுதியில் விவசாய பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.‌ மேலும் கிடார் குளம் செல்ல இப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆகவே இப்பகுதியில் மக்கள் அப்பகுதியில் சுடுகாட்டுக்கு வருபவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி காசிக்கு வாய்த்தான் கால்வாயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறை பொறியாளர் மணிகண்டராஜன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் பி எம் அன்பழகன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக்முகமது, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன், இஸ்மாயில், அமானுல்லா, ஒன்றிய இளைஞரணி செய்யது இப்ராஹிம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி பாண்டியன், துணைத்தலைவர் மஜித், முத்துப்பாண்டி, முகமது அனிபா, அன்சார் அலி, தமமுக ஊடகப்பிரிவு அப்துல் முத்தலிபு, சதாம் உசேன், ராஜா, பரமசிவம், ராம்குமார், பழனி, உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News