சுந்தரபாண்டியபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

சுந்தரபாண்டியபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-08 11:33 GMT

சுந்தரபாண்டிபுரம் கிராமத்தில் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக சார்பு நீதிமன்ற முதன்மை துணை நீதிபதி ருஷ்க்கின்ராஜ் அவர்களின் உத்தரவின் பெயரில் சுந்தரபாண்டிபுரம் கிராமத்தில் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகள் வட்ட சட்டப்பணிகள் குழு பொதுமக்களின் தீர்க்கப்படாத குறைகளை மனுக்களாக பெற்று சிவில் உரிமைகள் வழங்கி இருக்கின்ற நன்மைகள் வட்ட சட்டப்பணிகள் ஆற்றும் பணிகள், தீர்வுகள். குறித்து தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் PLV இராசுப்பிரமணியன் பேசினார்.

மேலும் சமூக நலத் திட்ட மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கலந்து கொண்ட ஜெயராணி மற்றும் வழக்குப்பணியாளர் நிஷா ஆகியோர் இளம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக நல திட்டத்தின் மூலம் மகளிர் உரிமை துறை யின் அங்கமான ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் வழங்கப்படுகின்ற உதவிகள் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.

மேலும்பீடி சுற்றுவதால் மற்றும் புகைப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தென்காசி காச நோய் பிரிவு கோடிநேட்டர்  சிபிச்சக்கரவர்த்தி பேசினார்.  முகாமில் நீண்ட நாட்களாக மனு செய்தும் கிடைக்கப்பெறாத பட்டாக்களை களை பெற்று தர வேண்டியும்,ரேஷன் கடை மண்ணெண்ணெய் குறைத்து வழங்குவது நல்ல அரிசி வழங்காதது குறித்தான புகார்களும், கைரேகை பதிவு விழாத வயதானவர்களுக்குபொருட்கள் வழங்காமல் அலைக்கழிக்கப்படும்.

முதியோர்களுக்கு மற்ற சொந்தங்கள் மூலம் பொருட்கள் பெற்றுக்கொடுக்க வழிவகை செய்திட கேட்டும்.குடிநீர் பிரச்சனை, குடிநீரில் சாக்கடை கலந்து வரும் அவல நிலை குறித்தான புகார்களும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் கேட்டும்.கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் களுக்கான அரசு பணி முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட கேட்டும்.

பீடி தொழிலுக்கு மாற்றாக படித்த பெண் தொழிலாளிகளுக்கு IINDIAN OVERSECESBANK (Leed bank) மூலம் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கிட கேட்டும் அரசின் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சர்வதேச சிவில் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் கண்காணிப்பு மாவட்ட செயலாளர் பூவையா பேசினார்.மற்றும் மாவட்ட சண்முகம், முருகையா மற்றும் நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத்தலைவர் பண்டாரம் சமுக செயல்பாட்டாளர் .முத்து ஆகியோரும் மேலும் பேரூராட்சி நிர்வாகம் வாகன ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஏற்ப்பாடு செய்திருந்தனர். பெறும்பாலனோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News