தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-10-22 02:45 GMT

தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக திருவிழாக்கள் நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், திரவியம், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவிட் 19 தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் வீதியுலாவாக உற்சவமூர்த்திகள் வாகனப் புறப்பாடு, போன்ற நிகழ்வுகள் திருக்கோயில் உள்ளே பிரகாரங்களில் நடத்தப்படும். தேரோட்டம் நடத்தப்படவில்லை. திருக்கல்யாண வைபவம் 1.11.2021 அன்று இரவு 9:00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News