மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-10-20 06:04 GMT

தென்காசி அருகே உள்ள மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் என் ஜி ஓ காலனி பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களுக்குள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் என்ஜிஓ காலனி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற வயதானவர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியாகும்.

இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை  அதிகமாக காணப்படுகிறது.

காலை மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக அனைத்து தெருக்களிலும் அலைந்து திரிவதால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள்  அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக உள்ளது. காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவர்களும் இந்த தெரு நாய்களினால் பல்வேறு அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தத் தெரு நாய்களுக்குள் ஏற்படும்  சண்டையினால் நாய்கள் வேகமாக  ஓடிவந்து சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும்  மீது விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்த தெரு நாய்களின் தொல்லைக்கு மேலகரம் பேரூராட்சி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பாரதி நகர் மற்றும் என்ஜிஓ காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News