குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடி: பணத்தை மீட்டு ஒப்படைத்த போலீசார்

குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடியில் சிக்கியவருக்கு பணத்தை மீட்டு போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2022-04-14 07:47 GMT

மோசடி பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம், கலப்பகுளம் பகுதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் போன் விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.12,800 பணத்தை விளம்பரத்தில் வந்த வங்கி கணக்கிற்கு Phone Pe மூலமாக அனுப்பியுள்ளார்.

ஆனால் மொபைல் போன் வராமல் ஏமாந்து விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறு தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அன்புச்செல்வன் புகாரளித்தார். புகாரின்பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி விசாரணை மேற்கொண்டு அந்த பணத்தை மீட்டார்.

மீட்கப்பட்ட ரூ.12,800 பணத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலையில் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News